புற்று நோய்க்கு புதிய மருந்து; 3 பேருக்கு நோபல் பரிசு!

திங்கள், 3 அக்டோபர் 2011 (19:05 IST)
புற்று நோய்க்கான புதிய மருந்து மற்றும் சிகிச்சை அளிக்க ஏதுவாக, உடம்பின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ரகசியங்களை கண்டறிந்து வெளியிட்ட மூன்று மருத்துவ விஞ்ஞானிகளுக்கு 2011 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த புரூஸ் பெட்லர், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜூலேஸ் ஹாஃப்மேன் மற்றும் கனடாவை சேர்ந்த ரேல்ப் ஸ்டெய்ன் மேன் ஆகிய மூவரும் சேர்ந்து இந்த விருதை பகிர்ந்து கொள்கிறார்கள்.

இதில் புரூஸ் மற்றும் ஜூலேஸ் ஆகிய இருவரும் நோய் தாக்கியவுடன் நோய் எதிர்ப்பு மண்டலம் எவ்விதமாக எதிர்வினையாற்றுகிறது என்பதன் முதல்கட்ட ஆய்வை கண்டறிந்தனர்.

கனடா விஞ்ஞானியான ரால்ப் கண்டறிந்த உயிரணுக்களின் கிளைகள் குறித்த ஆய்வுதான், அதற்கு பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிக்கு முக்கிய உதவியாக இருந்ததாக விருது கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்