புகுஷிமா அணு உலை கதிர்வீச்சு அதிபயங்கரமானது: ஜப்பான் பிரதமர்

வியாழன், 25 ஆகஸ்ட் 2011 (19:27 IST)
புகுஷிமா அணு உலை பேரழிவினால் வெளியேறும் கேசியம் கதிர்வீச்சு அதிபயங்கரமானது என்று ஜப்பான் பிரதமர் நவ்டோ கன் கூறியுள்ளார்.

ஜப்பானில் கடந்த மார்ச் மாதம் சுனாமி தாக்கியதில், புகுஷிமா அணு உலை வெடித்து சிதறியது. இதன் காரணமாக அதிலிருந்து "கேசியம்-137" என்னும் அதிபயங்கர கதிர் வீச்சு வெளியேறி வருகிறது.

இந்த கதிர் வீச்சு, இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா, ஜப்பானின் ஹிரோஷிமாவில் வீசிய அணுகுண்டைப் போன்று 168 மடங்கு பேராபத்தை விளைவிக்கக்கூடியது என்று, இது தொடர்பாக ஜப்பான் பிரதமர் நவ்டோ கன் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஆனால், இதுவரை இந்த கதிர்வீச்சின் காரணமாக, எவரும் இறந்ததாகவோ, பாதிப்புக்குள்ளானதாகவோ ஆதாரப்பூர்வமான தகவல் ஏதும் இல்லை என்றும் அதில் மேலும் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்