பிரிட்டிஷ் மன்னராட்சி முறை முட்டாள்தனமானது: சல்மான் ருஷ்டி கடும் சாடல்

ஞாயிறு, 26 செப்டம்பர் 2010 (16:15 IST)
பிரிட்டிஷ் மன்னராட்சி முறையும் அதன் பாரம்பரியமும் முட்டாள்தனமானது என்று பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி கடுமையாக சாடியுள்ளார்.

லண்டனில் இருந்து வெளிவரும் "த சண்டே டைம்ஸ்" பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார் அவர்.

அப்படியானால் நீங்கள் ஏன் "நைட்ஹுட்" பட்டத்தை ஏற்றுக் கொண்டீர்கள் என்ற கேள்விக்கு, "இலக்கியத்துக்காக பிரான்ஸ் நாட்டின் பட்டத்தை நான் ஏற்கெனவே பெற்றுள்ளேன். இந்நிலையில், எனது நாட்டின் பட்டத்தை மறுப்பது சரியாக இருக்காது என்பதால் 'நைட்ஹுட்' பட்டத்தை ஏற்றுக்கொண்டேன். இதற்கு எனது நன்றி." என்று பதிலளித்துள்ளார் ருஷ்டி.

இந்தியாவில் மும்பையில் பிறந்த சல்மான் ருஷ்டி, பிரிட்டன் குடியுரிமை பெற்று லண்டனில் வசிக்கிறார். இவர் எழுதிய ' தி சாத்தான் வெர்சஸ்' என்ற நாவ கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்