பாலியல் வன்கொடுமை குற்றவாளிக்கு ஆண்மை நீக்கம்! - தென் கொரிய நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

வியாழன், 3 ஜனவரி 2013 (14:18 IST)
தென் கொரிய நீதிமன்றம் முதன்முறையாக, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளி ஒருவனுக்கு வேதியியல் முறையில் ஆண்மை நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளது.

பியோ (31) என்னும் நபர் தொடர்ச்சியாக பல குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் வந்தது. இதனை விசாரித்த போலீசார், பியோ 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2012 ஆம் ஆண்டு மே மாதம் வரை 15 க்கும் மேற்பட்ட இளம்வயதினரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியிருந்ததும், இந்த விஷயத்தை வெளியே சொன்னால் பாலியல் கொடுமைக்கு உள்ளானவர்களின் அந்தரங்க வீடியோக்களை இணையதளத்தில் வெளியிட்டுவிடுவேனென்றும் அவர்களை மிரட்டியது தெரியவந்தது.

குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட பியோவிற்கு 15 அண்டுகள் சிறை தண்டனை மற்றும் வேதியல் முறையில் ஆண்மை நீக்கம் ஆகிய இரு தண்டனைகளையும் விதித்து தென் கொரிய நீதிமன்றம் தீர்பளித்தது.

தென் கொரியாவில் பாலியல் வன்கொடுமை குற்றத்திற்காக வேதியல் முறையில் ஆண்மை நீக்கம் தண்டனை விதிக்கபட்டிருப்பது இதுவே முதல்முறையாகும். இதனால் கண்டிப்பாக பாலியல் குற்றங்கள் பெருமளவு குறையும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்