பாக். : விமான தாக்குதலில் 12 தீவிரவாதிகள் பலி

சனி, 4 ஜூலை 2009 (18:35 IST)
வடமேற்கு பாகிஸ்தானில், தாலிபான் நிலைகள் மீது விமானப்படை நடத்திய குண்டு வீச்சு தாக்குதலில் 12 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டியுள்ள வடமேற்கு பாகிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகள் பலர் இன்னும் பதுங்கியுள்ளனர்.அவர்களுக்கு எதிராக பாகிஸ்தான் இராணுவம் இறுதிக்கட்ட தாக்குதலை நடத்தி வருகிறது.

இந்நிலையில், வடமேற்கு பாகிஸ்தானிலுள்ள குர்ராம் என்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்த தாலிபான் நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் விமானப்படை நடத்திய தாக்குதலில் 12 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதனிடையே தெற்கு வாசிரிஸ்தான் பகுதியிலும் தாலிபான்களுக்கு எதிராக தனது தாக்குதலை பாகிஸ்தான் இராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது .

வெப்துனியாவைப் படிக்கவும்