பாகிஸ்தான் முன்னாள் 3 ராணுவ அதிகாரிகள் மீது விசாரணை

வெள்ளி, 3 ஆகஸ்ட் 2012 (15:49 IST)
பாகிஸ்தானில் லாகூர் பகுதியில் உள்ள ரெயில்வே துறைக்கு சொந்தமான நிலங்கள் தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டது.

இதில் சட்டவிதிமுறைக்கு புறம்பாக முறைகேடு நடந்ததாக புகார் கூறப்பட்டது. இப்பிரச்சினை குறித்து நதீம் அப்சல் கொன்டால் தலைமையிலான பாராளுமன்ற குழு விசாரணை நடத்தியது.

இதில் நிலம் குத்தகைக்கு விட்டதன் மூலம் ரெயில்வே துறைக்கு ரூ.2,500 கோடி இழப்பு ஏற்படுத்தியது தெரியவந்தது.

இதனை அடுத்து ரெயில்வே துறையில் முக்கிய பொறுப்புகளை வகித்த முன்னாள் ராணுவ அதிகாரிகளான ஜாவித் அஷரப், சயீத் உல்-சபார், அமீத் ஹசன் பட் ஆகியோர் மீது ஊழல் தடுப்பு போலீஸ் விசாரணை நடத்த சிபாரிசு செய்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்