பாகிஸ்தான் தொழிற்சாலைகளில் பயங்கர தீ- 100 பேர் கருகினர்

புதன், 12 செப்டம்பர் 2012 (13:31 IST)
பாகிஸ்தானில் உள்ள கராச்சி, மற்றும் லாகூரில் உள்ள இரண்டு தொழிற்சாலைகளில் ஏற்பட்ட தீவிபத்தில் இதுவரை பலி எண்ணிக்கை 100ஆக அதிகரித்துள்ளது. குறைந்தது 50 பேர் காயமடைந்துள்ளனர்.

நேற்று மதியம் லாகூரில் உள்ள ஷூ தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேரும், பிறகு மாலை கராச்சியில் ஜுவுளி ஆலை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 75 பேர்களும் பலியாயினர்.

இன்று காலை வரை மேலும் சிலர் இந்த இரு கட்டிடங்களிலும் மீட்கப்படமுடியாமல் சிக்கியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீ விபத்துக்கு மின்சார கோளாறே காரணம் என தெரியவந்துள்ளது. அங்கு தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக மின் கசிவு ஏற்பட்டு இந்த தீவிபத்து நடந்துள்ளது. தீயை அணைக்கும் பணியில் ஏராளமான தீயணைக்கும் படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். தற்போது தீ கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக தீயணைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்