பலநூறு பெண்களை நாசம் செய்த செக்ஸ் குற்றவாளி

சனி, 12 ஜனவரி 2013 (13:45 IST)
FILE
இங்கிலாந்தை சேர்ந்த பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளரஒருவர் தனது வாழ்நாளில் 200-க்கும் மேற்பட்ட பாலியல் குற்றங்களிலஈடுபட்டிருந்ததை போலீசார் உறுதி செய்துள்ளனர்.

ஜிம்மி சவைல், பிரபல ஆங்கில தொலைகாட்சி தொகுப்பாளர். பிபிசி ஆங்கில தொலைகாட்சியில் "ஜிம் வில் பிக்ஸ் இட்" மற்றும் " டாப் ஆப் தி பாப்ஸ்" போன்ற ஹிட்டான நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.

அனைத்து தரப்பினரிடையும் பிரபலமான ஜிம்மி 2011-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், அவரது 84 வயதில் உயிரிழந்தார். ஜிம்மியின் மறைவுக்கு பின் தான் அவரின் உண்மையான சுயரூபம் உலகிற்கு தெரியவந்தது.

அண்மையில் நடத்தப்பட்ட விசாரணையில் ஜிம்மி சவைல், தனது வாழ்நாளில் 200-க்கும் மேற்பட்ட செக்ஸ் குற்றங்களை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

விசாரணை அறிக்கைப்படி ஜிம்மி 1995 முதல் 2009 ஆம் ஆண்டு வரை 214 செக்ஸ் குற்றங்களில் ஈடுபட்டுள்ளார், இதில் 34 கற்பழிப்பு சம்பவங்கள் அடங்கும். ஜிம்மியால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சிறு குழந்தைகள் ஆவர். 8 முதல் 47 வயது நிரம்பியிருந்தவ்ர்களை மட்டும் தேர்வு செய்த ஜிம்மி, பள்ளிகள், மருத்துவமனைகள், தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையங்கள் என அனைத்து இடங்களிலும் பாலியல் லீலைகளில் ஈடுபட்டிருக்கிறார்.

இவ்வளவு குற்றங்களையும் செய்துவிட்டு, ஊடகம் கொடுத்த புகழின் நிழலில் ஜிம்மி மறைந்திருந்தார் என பலர் குறிப்பிட்டுக்கிறார்கள்.

214 செக்ஸ் குற்றங்கள் என்பது பதிவு செய்யப்பட்ட குற்றங்கள் மட்டுமே, பதிவே செய்யபடாத குற்றங்கள் இன்னும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்