நீதிமன்ற அவமதிப்பு: பாகிஸ்தான் பிரதமர் கிலானிக்கு கண்டனம்

புதன், 1 பிப்ரவரி 2012 (19:41 IST)
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானிக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் அதிபர் சர்தாரி மீதான ஊழல் வழக்கு விசாரணைகளை மீண்டும் தொடங்குமாறு பாகிஸ்தான் அரசுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

ஆனால், அதை பிரதமர் யூசுப் ரஸா கிலானி நிறைவேற்றாததால், அவருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.

இந்நிலையில்,இன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நாங்கள் உத்தரவிட்டபடி, சுவிஸ் அரசுக்கு கடிதம் எழுதி, சர்தாரி மீதான வழக்கை மீண்டும் நடத்த பிரதமர் கிலானி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்று நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்