நிலாவில் மர்ம பொருள்.. வேற்று கிரகவாசிகளின் பறக்கும் தட்டா?

சனி, 18 ஜனவரி 2014 (12:13 IST)
நிலாவின் மேற்பரப்பை கூகுள் நிலா படமெடுத்து விவரிக்கிறது. இத்தகைய படமொன்றில் ஒரு குறிப்பிட்ட மர்மபொருள் நிலவின் மேற்பரப்பில் இருக்கிறது. இது விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த மர்ம பொருள் வேற்று கிரகம் சார்ந்ததாக இருக்குமெனவும் சந்தேகிக்கப்படுகிறது.
FILE

பூமியை கூகுள் எர்த் படமெடுப்பது போல் நிலவை கூகுள் நிலா படமெடுத்து வந்தது. அப்போது ஒரு குறிப்பிட்ட மர்மபொருள் நிலவின் மேற்பரப்பில் இருப்பது படங்களில் விழுந்தது.

முக்கோண வடிவில் இருந்த அந்த மர்மபொருளின் முனைகளில், ஒளிரும் தன்மை கொண்ட 7 சிறு புள்ளிகள் காணப்பட்டது குறிப்பிடத்ததக்கது. அண்டார்டிகா பகுதியில் கூட முன்னதாக ஒரு சமயத்தில் இது போன்ற மர்ம கட்டமைப்பு காணப்பட்டதாக தெரிவிக்கப்பபட்டுள்ளது.
FILE

நிலவை ஆராயச்சென்ற விண்கலமாக கூட இது இருக்க வாய்ப்புள்ளதாகவும் அல்லது வேற்று கிரகம் சார்ந்த பொருளாக இது இருக்கக்கூடும் என்றும் கூறிப்படுகிறது.

இது நிலாவில் வடக்காக 22042'38.46N தீர்க்க ரேகையிலும் கிழக்காக 142034'44.52E தீர்க்க ரேகையிலும் காணப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
FILE

இது விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக நவம்பர் மாதம் செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சியாளர்கள் ஒரு வகையான உடும்பின் புதைபடிவம் போன்ற உருவத்தை கண்டறிந்தார்கள் என்பதும், இது போல இதுவரை 10-15 விலங்குகள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்