நடுவானில் வாந்தி, வயிற்றுப்போக்கு - அவதிப்பட்ட பயணிகள்

வெள்ளி, 2 ஆகஸ்ட் 2013 (10:44 IST)
FILE
சிட்னிக்கு சென்றுக்கொண்டிருந்த குவாண்டாஸ் விமானத்தில் பயணம் செய்துக்கொண்டிருந்த சுமார் 26 பயணிகள் நடுவானில் வாந்தி, மயக்கம் போன்ற உடல் உபாதைகளால் அவதிப்பட்டனர்.

சாண்டியாகோவிலிருந்து கியூஎப் 28 என்ற ஆஸ்திரேலியாவின் குவாண்டாஸ் விமானம் சிட்னிக்கு புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் பயணம் செய்த ஒரே குழுவை சேர்ந்த 26 பயணிகளுக்கு திடீரென வயிற்று உபாதைகள் ஏற்பட்டன.

இவர்களில் பெரும்பான்மையானோருக்கு வாந்தியும், வயிற்றுப்போக்கும் ஏற்பட்டுள்ளது. சிட்னியில் இறங்கியவுடன் இவர்கள் அனைவரும் விமான நிலைய மருத்துவ ஊழியர்களால் அங்கிருந்த மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

மற்ற பயணிகளும் அடுத்த 24 மணி நேரம் முதல் 48 மணி நேரம் வரை தங்களுடைய உடல்நலத்தில் கவனம் செலுத்தும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார்கள்.

இது தொடர்பாக தெரிவித்த அதிகாரி ஒருவர், விமானத்தில் நோய்வாய்ப்பட்ட பயணிகள் அனைவருமே விமானத்தில் ஏறுவதற்கு முன்னரே நோய்த் தாக்கம் பெற்றிருக்க வேண்டும் என்றும், விமானத்தில் பயணிக்கும்போது அவர்களின் நோய் வெளிப்படையாகத் தெரிய ஆரம்பித்தது என்றும் கூறியிருக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்