தொலைபேசி ஒட்டுக்கேட்புக்குக் கட்டுப்பாடுகளை விதிக்க அதிபர் ஒபாமா திட்டம்

வெள்ளி, 28 மார்ச் 2014 (13:34 IST)
அமெரிக்க அரசின் ரகசிய கண்காணிப்பு நடவடிக்கைகளால் எழுந்துள்ள சிக்கலைத் தணிக்கும் விதமாக, தொலைபேசி ஒட்டுக்கேட்பு நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் திட்டத்தை அதிபர் ஒபாமா வெளியிட்டார்.
 
அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு அமைப்பு (என்.எஸ்.ஏ) லட்சக்கணக்கானவர்களின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்பதாக வெளியான தகவல்களால் உலகம் முழுவதிலுமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. 
 
இந்நிலையில் பொதுமக்களின் உரையாடல் பதிவுகளை அரசு மொத்தமாகப் பெறுவதையும், வைத்திருப்பதையும் தவிர்க்கும் வகையில் புதிய சட்டம் இயற்றப்படும் என்று அதிபர் ஒபாமா தெரிவித்தார். அதன்படி, எந்தவொரு உளவு அமைப்பும், தொலைபேசி நிறுவனங்களிடமிருந்து அவர்களது வாடிக்கையாளர்களின் உரையாடல் பதிவுகளைப் பெற நீதிமன்றத்தின் அனுமதியைப் பெறவேண்டும்.
 
அமெரிக்க அரசு பல்வேறு உலக நாடுகளின் தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்து வருகிறது. இதனால் உலகம் முழுவதிலுமிருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்ததுள்ள நிலையில், பயங்கரவாத அச்சுறுத்தல்களை முறியடிப்பதற்குத் தேவையான தகவல்களை உளவு அமைப்புகள் திரட்டுவதற்கும் பாதிப்பு ஏற்படாமல், பொதுமக்களின் தனியுரிமையையும் பாதுகாக்கும் வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுவதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்