தேவைப்பட்டால் பாக்.கில் மீண்டும் தாக்குதல் - ஒபாமா
ஞாயிறு, 22 மே 2011 (16:17 IST)
பயங்கரவாதத் தலைவர்கள் வேறு யாரேனும் பாகிஸ்தானில் பதுங்கியிருப்பது தெரியவந்தால், பின் லேடனை சுட்டுக் கொன்றதைப் போன்ற நடவடிக்கையை மேற்கொள்வோம் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
பிரிட்டனுக்குப் புறப்படுதற்கு முன் பிபிசி செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளிட்ட ஒபாமா, பாகிஸ்தானின் இறையாண்மை மீது மரியாதை வைத்துள்ளோம். ஆனால், அமெரிக்க மக்களையோ, கூட்டணி நாட்டு மக்களையோ கொல்லும் பயங்கரவாதிகளை அனுமதிக்க முடியாது என்று கூறினார்.
அல் கய்டாவின் மற்ற தலைவர்களோ அல்லது தாலிபான் தலைவர் முல்லா ஒமரோ பாகிஸ்தானிலோ அல்லது பிற நாட்டிலோ இருப்பது தெரியவந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு, தேவைப்பாட்டால் அமெரிக்கா தன்னிச்சையான நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று அதிபர் ஒபாமா கூறினார்.