தாய்லாந்து சென்றார் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா

ஞாயிறு, 18 நவம்பர் 2012 (16:50 IST)
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தேர்தலில் பெற்ற வெற்றிக்கு பிறகு தாய்லாந்து, மியான்மர், கம்போடியா ஆகிய 3 ஆசிய நாடுகளுக்கு முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணமாக செல்கிறார் என்று முன்பே அறிவிக்கப்பட்டது.

இதைதொடர்ந்து இன்று ஒபாமா தாய்லாந்து சென்றார். தாய்லாந்து வந்த ஒபாமாவுக்கு பாங்காக் நகர விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

அங்கு அவர், நீண்ட காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தாய்லாந்து மன்னர் பூமிபால் அதுல்யாதேஜை சந்திக்கிறார்.

பிறகு பிரதமர் யங்லக் ஷினவத்ராவுடன் பேச்சு நடத்துகிறார். ஒபாமா நாளை மியான்மர் சென்று அந்நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்