தாய்மார்கள் கர்ப்ப காலத்தில் மது அருந்த நீதிமன்றம் தடை

செவ்வாய், 25 பிப்ரவரி 2014 (19:32 IST)
கர்ப்ப காலத்தில் பெண் மது அருந்துவது கூடாது என்று இங்கிலாந்து நாட்டின் தாய்மார்களுக்கு உத்தரவிடும் வகையில் அந்த நாட்டின் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே கர்ப்ப காலத்தில் மது அருந்துவது குற்றமாகக் கருதப்படும் என்று அந்நாட்டு நீதிமன்றம் கூறியுள்ளது.
FILE

இங்கிலாந்தில் கர்ப்பமாகும் பெண்கள் மது அருந்துவது அதிகரித்து வருகிறது. இதனால் பிறக்கும் குழந்தைகள் ஊனத்துடன் பிறக்கின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் தாயின் மது பழக்கத்தால் பிறக்கும் பச்சிளம் குழந்தைகள் பாதிப்புகளுடன் பிறப்பது 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கடந்த 2011-12ஆம் ஆண்டில் மட்டும் இது போன்று 313 குழந்தைகள் பாதிப்புகளுடன் பிறந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. தற்போது பிறக்கும் நூறு குழந்தைகளில் ஒன்று தாயின் மது பழக்கத்தின் பாதிப்பால் பிறப்பதாகக் கூறப்படுகிறது.

எனவே கர்ப்ப காலத்தில் தாய்மார்கள் மது அருந்துவது குற்றமாகக் கருதப்படும் என்று இங்கிலாந்து நாட்டின் சட்டத்தில் புதிய பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்