தலாய் லாமாவை ஒபாமா சந்திக்கக் கூடாது: சீனா எச்சரிக்கை

செவ்வாய், 2 பிப்ரவரி 2010 (12:42 IST)
அமெரிக்கா வரும் திபெத்திய தலைவர் தலாய் லாமாவை அதிபர் பராக் ஒபாமா சந்திக்கக் கூடாது என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

திபெத்திய மத தலைவர் தலாய் லாமா இம்மாதம் அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக அவர் வாஷிங்டனிலும் ஓரிரு தினங்கள் தங்க உள்ளார்.

அப்போது அவர் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை சந்திக்கக்கூடும் என செய்தி வெளியாகி உள்ளது.

இந்நிலையில் அமெரிக்கா வரும் தலாய் லாமாவை ஒபாமா சந்திக்ககூடாது என சீனா எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக பீஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய சீன அமைச்சர் ஜுஹு வெய்குன், தலாய் லாமாவை ஒபாமா சந்தித்தால் சீனா - அமெரிக்கா இடையேயான அரசியல் உறவு வெகுவாக பாதிக்கப்படும் என்றார்.

மேலும் இரு நாடுகளிடையேயான பரஸ்பர நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பும் பாதிப்புக்குள்ளாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்