ஜெர்மனியின் 60வது குடியரசுத் தினவிழா

வெள்ளி, 22 மே 2009 (16:57 IST)
ஜெர்மனியில் 60வது குடியரசுத் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

இரண்டாம் உலகப் போருக்கு பின்னர், கடந்த 1949ம் ஆண்டு மே 23ம் தேதி, ஜெர்மனி குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் தனி சட்டத்திட்டங்கள் வகுக்கப்பட்டன.

இதன் 60வது குடியரசுத் தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. தலைநகர் பெர்லினில் உள்ள பெர்லின் இல்லத்தில் இன்று நடந்த விழாவில் அதிபர் ஹோர்ஸ்ட் கோய்லர் குடியரசுத் தின உரையாற்றினார். முக்கிய அரசியல் தலைவர்கள் உள்பட ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்