ஜார்ஜியாவில் மித நிலநடுக்கம்

செவ்வாய், 8 செப்டம்பர் 2009 (10:28 IST)
ஜார்ஜியாவில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 6.2 ஆகப் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜார்ஜியா தலைநகர் திபிலிஸியில் இருந்து வடமேற்கே 156 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டதாகவும், இதனால் பெரியளவில் பாதிப்பு, சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்தாண்டு ஜார்ஜியாவில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தில் 13 பேர் உயிரிழந்தது நினைவில் கொள்ளத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்