ஜாக்சன் மரணம் : விசாரணைக் குழுவில் மருந்தியல் அமலாக்க அதிகாரிகள்

வியாழன், 2 ஜூலை 2009 (13:57 IST)
பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மரணமடைந்தது எப்படி என்பது குறித்து புலன் விசாரணை நடத்தி வரும் விசாரணைக் குழுவில் மருந்தியல் அமலாக்க அதிகாரிகளும் இணைந்துள்ளனர்.

பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மரணமடைந்தது எப்படி என்பது குறித்து சர்ச்சை எழுந்த நிலையில், வலி நிவாரணியாக அவர் எடுத்துக் கொண்ட போதை மருந்துதான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட காரணமாக அமைந்தது என செய்திகள் வெளியாகி இருந்தது.

இதனையடுத்து ஜாக்சன் மரணம் குறித்த லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாண காவல் துறை புலன் விசாரணை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் , ஜாக்சனின் மரணத்திற்கு போதை மருந்து காரணம் என்று கூறப்படுவதால், இது குறித்த காவல் துறை விசாரணைக் குழுவில் தாங்களும் சேர்ந்துகொண்டுள்ளதாக மருந்தியல் அமலாக்க பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த பிரிவு அதிகாரிகள் ஜாக்சனின் டாக்டரிடம் விசாரணை நடத்துவார்கள் என்றும், அப்போது ஜாக்சனுக்கு வலி நிவாரணியாக பரிந்துரைத்த மருந்துகளில் இடம்பெற்றுள்ள மருந்து கலவைகள் பற்றிய விவரங்களையும், அவற்றை தாங்கள் பரிந்துரைக்கலாமா என்பதற்கான அனுமதியையும் மருந்தியல் அமலாக்கப் பிரிவிடம் தெரிவித்து ஒப்புதல் வாங்கினாரா என்பது குறித்து விசாரிப்பார்கள் என்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்