சைக்கிளில் சென்று கிராமங்களில் இண்டெர்னெட் பயன்பாட்டை பரப்பி வரும் வங்கதேச பெண்மணி!

வெள்ளி, 2 நவம்பர் 2012 (13:18 IST)
வங்கதேசத்தைச் சேர்ந்த 29 வயது பெண்மணியான சாத்தி அக்தர் கிராம்த்திற்கு சைக்கிளில் சென்று லாப்டாப் மூலம் இண்டெர்னெட்டை கிராமப் பெண்களுக்கு அறிமுகம் செய்து வருகிறார்.

இன்ஃபோலேடி என்று செல்லமாக அழைக்கபப்டும் சாத்தி அக்தரைப் பற்றி இண்டெர்னெட்டினால் பயனடைந்த கிராமப்பெண்மணி அமினா பேகம் குதூகலத்துடன் குறிப்பிடுக்கிறார்.

அதாவது கம்ப்யூட்டரையே பார்க்காத இவர் தற்போது ஸ்கைப், சாட் என்று தூள் கிளப்புகிறாராம்.

இந்த கைங்கரியத்தைச் செய்வது சாத்தி அக்தர் மட்டுமல்ல 10க்கும் மேற்பட்ட இன்ஃபோலேடீஸ் வங்கதேசத்தின் குக்கிராமங்களுக்குச் சென்று இண்டெர்னெட்டை அறிமுகம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

இதனால் கிராம மக்களுக்கு அரசு சார்ந் சேவைஅகள் முதல் பொழுதுபோக்கு தூரத்தில் இருக்கும் தங்களது காதலர்கள், உறவினர்கள் அகையோருடன் சாட், ஸ்கைப் மூலம் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடிந்துள்ளது.

2008ஆம் ஆண்டு உள்ளூர் வளர்ச்சிக் குழுவான டி.னெட் இந்த இன்ஃபோலேடீஸ் திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்திற்கு நிதி வருவதைப் போறுத்து மேலும் சில பேரை நிய்மைத்து கிராமம் முழுதும் அதாவது செல்போன்கள் புகழ் பெற்ற அளவுக்கு இண்டெர்னெட்டையும் பழக்கப்படுத்தவுள்ளோம் என்கிறது அந்த அமைப்பு.

பாட்டிகளும், படிக்காத வங்கதேச கிராம பெண்களும் கூட தற்போது தேவையான தகவல்களை இன்டெர்னெட் மூலம் பெறக் கற்றுக் கொண்டுவிட்டனர்.

இந்திஆவிலும் இதுபோன்ற முயற்சிகளை மேற்கொள்ளலாமே. எத்தனையோ பெண்கள் படிப்பறிவில்லாமல் இருக்கின்றனர். அவர்களுக்கு இண்டெர்னெட்டைக் கற்றுக் கொடுப்பது இல்லாத படிப்பறிவுக்கு ஒரு மாற்றாக அமையும்.

வெப்துனியாவைப் படிக்கவும்