சூரியனை விட 1300 மடங்கு பெரிய மஞ்சள் நட்சத்திரம்

வெள்ளி, 14 மார்ச் 2014 (12:54 IST)
சூரியனை விட சுமார் 1300 மடங்கு பெரிய மஞ்சள் நட்சத்திரம் தற்போது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. சிலியில் உள்ள அடகாமா பகுதியில் இருந்து தொலை நோக்கி மூலம் கண்டறியப்பட்ட இந்த மஞ்சள் நட்சத்திரம் தான் இதுவரையில் கண்டுபிடிக்கபட்ட மிக பெரிய நட்சத்திரமாகும்.
FILE

சிலி நாட்டில் உள்ள அடகாமா என்ற இடத்தில் மிகப்பெரிய தொலைநோக்கி நிறுவப்பட்டுள்ளது. அதன் மூலம் விண்வெளியில் உள்ள கோள்கள் மற்றும் நட்சத்திரங்கள் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஒலிவர் செஸ்நியு என்னும் நபரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், மஞ்சள் நிறத்தினால் ஆன ராட்ஷச நட்சத்திரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அது சூரியனை விட 1,300 மடங்கு பெரியதாக உள்ளது. இந்த நட்சத்திரத்திற்கு HR 5171 A என பெயரிடப்பட்டுள்ளது.
FILE

இது தொடர்பாக தெரிவிக்கபட்டுள்ள தகவலில், சூரிய குடும்பத்தை சேர்ந்த HR 5171 A என்னும் இந்த நட்சத்திரம் பூமியில் இருந்து 12 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளதாகவும், இதற்கு ஒரு துணை நட்சத்திரம் உள்ளதாகவும் அது இந்த நட்சத்திரத்தை 1300 நாட்களுக்கு ஒருமுறை சுற்றிவருவதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்