சீன ஜனநாயக போராளிக்கான நோபல் பரிசை மனைவி பெறுகிறார்

செவ்வாய், 12 அக்டோபர் 2010 (13:17 IST)
அமைதிக்கான நோபல் பரிசை வென்ற சீனாவின் ஜனநாயக போராளியும், அரசின் எதிர்ப்பாளருமான லியூ ஜியாபோ, தமது மனைவியை அப்பரிசை வாங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

அரசியல் சீர்திருத்தம், நாடாளுமன்ற சுதந்திரம், மத வழிபாட்டு சுதந்திரம் போன்றவற்றை வலியுறுத்தி சீனாவில் போராடி வரும் லியூ ஜியாபோ, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு 2010 ஆம் ஆண்டுக்கான அமைதி நோபல் பரிசை வழங்குவதாக நோபல் பரிசு கமிட்டி கடந்த வாரம் அறிவித்தது.

இந்நிலையில், தாம் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதால் தனது சார்பில் தமது மனைவியை அப்பரிசை வாங்குமாறு லியூ ஜியாபோ கேட்டுக்கொண்டுள்ளதாக மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. .

வெப்துனியாவைப் படிக்கவும்