சீனாவில் 107 செய்தி இணையதளங்கள் முடக்கம்

வெள்ளி, 2 ஆகஸ்ட் 2013 (17:50 IST)
FILE
சீனாவில் செய்திகளை வெளியிடும் சுமார் 107 இணையதளங்களை சீன அரசு முடக்கியுள்ளது. முறையான உரிமம் பெறாத காரணத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

சீனாவில் சட்டவிரோதமாக செயல்படும் இணையதளங்களை முடக்கும் பணியும், இணையதங்களில் வெளியிடப்படும் செய்தியின் நம்பகத்தன்மையை அதிகாரிக்கும் நடவடிக்கையும் மே மாதம் 9 ஆம் தேதி துவங்கப்பட்டது.

இதற்கு புதிதாக தலைத்தூக்கிய நூற்றுக்கணக்கான இணையதளங்கள் தான் காரணம். இந்த இணையதளங்கள் போலியான செய்திகளை வெளியிடுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், இந்த நடவடிக்கையால் மக்கள் பத்திரிக்கையாளர்களின் கருத்து சுதந்திரத்தை அரசு பறிக்கிறது என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நடவடிக்கையில் மக்களிடம் பிரபலமாக விளங்கிய ‘வாய்ஸ் ஆப் த பீப்பிள், டெமாக்ரடிக் லீகல் சூப்பர்விஷன் நெட், சைனீஸ் சிட்டிசன்ஸ் நியூஸ், ஜஸ்டிஸ் ஆன்லைன் ஆகியவை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்