சிறிலங்க போர் விமானங்கள் நடு வானில் மோதி வெடித்துச் சிதறின

செவ்வாய், 1 மார்ச் 2011 (14:22 IST)
சிறிலங்க விமானப் படை 60 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை குறிக்கும் வகையில் நாளை நடைபெறவிருந்த விழாவிற்கான சிறப்பு பயிற்சியில் ஈடுபட்டிருந்த அந்நாட்டு விமானப் படையின் கி்ஃபீர் ரக போர் விமானங்கள் நடுவானில் மோதி்க்கொண்டு வெடித்துச் சிதறியுள்ளன.

இலங்கையின் மேற்குப் பகுதியில் உள்ள கம்பஹா மாவட்டத்திலுள்ள வாரணா என்ற இடத்தில் உள்ள தளத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற இஸ்ரேல் தயாரிப்பான கிஃபீர் விமானங்கள் இரண்டு நடு வானில் மோதிக்கொண்டு வெடித்துச் சிதறியுள்ளன என்றும், அவற்றின் பாகங்கள் வெட்ட வெளியில் சிதறிக் கிடப்பதாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தாக பிடிஐ செய்தி கூறுகிறது.

இந்த இரண்டு விமானங்களிலும் இருந்த பைலட்டுகள் நிலை என்ன என்பது குறித்து எந்த தகவலும் இதுவரை கிட்டவில்லை என்று அச்செய்தி கூறுகிறது.

ஈழத் தமிழர்களுக்கு எதிரான சிறிலங்க அரசு மேற்கொண்ட இனப்படுகொலைப் போரில் கிஃபீர் விமானங்களில் இருந்துதான் தடை செய்யப்பட்ட வெப்பக் குண்டுகள், வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள், கிளஸ்டர் பாம் என்றழைக்கப்படும் கொத்துக் குண்டுகள் தமிழர்கள் மீது வீசப்பட்டு பல நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்