சிரியாவில் ஒரே நாளில் 72 கைதிகளுக்கு மரண தண்டனை!

வியாழன், 1 செப்டம்பர் 2011 (13:37 IST)
சிரியாவில் ஒரே நாளில் 72 கைதிகளுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த அந்நாட்டு சட்டத்துறை தலைவர், தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

சிரியாவில் ஒரே நாளில் 72 கைதிகளுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டது. மேலும் 400க்கும் மேற்பட்ட உடல்கள் பொது பூங்காக்ககளில் புதைக்கப்படன.

அதிபர் பஷார் அல்-சாத் மற்றும் அவரது படையினரின் கொடூர நடடிவடிக்கை சகிக்காமல் சிரியாவின் தலைமை சட்டத் தலைவரான அட்னன் முகமது பகோர் தனது அட்டர்னி ஜெனரல் பதவியை ராஜினாமா செய்தார்.

சிரியாவில் புரட்சிப் படையினர் அட்னனை கடத்திச் சென்று விட்டதாக திங்கட்கிழமை அந்த நாட்டின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்து இருந்தது.அவர் மத்திய நகரமான ஹமாவில் இருந்து பணிக்கு சென்று கொண்டிருந்த போது கர்னாஸ என்ற கிராமத்தில் புரட்சிப்டையினர் கடத்தியதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அட்னன் பகோர் வீடியோவில் பேசுகையில், ஹமா மத்திய சிறையில் ஜீலை 31 ஆம் தேதி 72 கைதிகள் கொல்லப்பட்டதையும், அவர்களில் அமைதி வழி போராட்டக்காரர்களும் இருந்தனர் என்றும் தெரிவித்தார்.

பொது பூங்காக்களில் உள்ள கல்லறைகளில் 420 உடல்கள் புதைக்கப்பட்டு உள்ளன. அமைதி போராட்டக்காரர்கள் 10 ஆயிரம் பேர் சிறையில் உள்ளனனர்.320 கைதிகள் சித்ரவதை தாங்காமல் மரணம் அடைந்துள்ளனர் என்றும் அவர் வேதனையடன் குறிப்பிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்