சிரியாவிலிருந்து 100000 அகதிகள் பிற நாடுகளில் தஞ்சம்

செவ்வாய், 4 செப்டம்பர் 2012 (18:56 IST)
சிரியாவில் அதிபர் ஆசாத் படைக்கும் போராட்டக் காரர்களுக்கும் நடந்து வரும் போரில் 100000அகதிகள் வேறு நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

தீவிரவாதிகள் பிடியில் உள்ள அலெப்போ பகுதியில் நேற்று அரசுப்படையினர் நடத்திய வான் தாக்குதலில் கட்டிடத்திற்குள் இருந்த 25க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

மக்கள் தினம்தோறும் கொல்ல்ச்ப்படுவது தொடர்கிறது. வாழ்க்கை சூழலை இழந்து தெருக்களில் தவித்து வரும் மக்கள் பிற நாடுகளுக்கு தஞ்சம் புகுகின்றனர். இதனால் ஆகஸ்ட் மாதம் வரை வேறு நாடுகளில் தஞ்சம் அடைந்தவரின் எண்ணிக்கை 103,416 ஆகும்.

இவை தற்போது இரு மடங்காக அதிகரித்து 235,300 மக்கள் அகதிகளாக சென்றுள்ளனர். மேலும் திணம் ஆயிரம் மக்களாவது செஞ்சிலுவை சங்கம் உள்ளிட்ட மையங்களில் அகதிகளாக பதிவு செய்ய வருவதாக கூறப்படுகிறது.

இதனால் முகாம்களில் உதவிகளை மேற்கொள்வதிலும் சிரமம் ஏற்பதுவதாக ஐ நா குழு தெருவித்துள்ளது.

மேலும் தீவிரமடைந்து வரும் இந்த போராட்டம் தற்போதக்கு முடிவுக்கு வர வாய்ப்பில்லை என ஐ. நா.வின் அமைது துதர் லக்தர் பிராமி கவலை தெரிவித்துள்ளார்.

ஆபத்தான சூழலில் இங்கு வசிக்கும் மிஞ்சியுள்ள சிரிய மக்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய கோரி சர்வதேச செஞ்சிலுவை சங்க குழு தலைவர் சிரிய அதிபர் ஆசாத் ஒரு மணி நேரத்திற்கு மேல் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்