சர்தாரியை காப்பாற்ற சட்டம்; உச்சநீதிமன்றம் நிராகரிப்பு

சனி, 4 ஆகஸ்ட் 2012 (14:04 IST)
பாகிஸ்தான் அதிபர் அசிப் அலி சர்தாரியின் மீது ஊழல் குற்றசாட்டு எழுப்பப்பட்டு அது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் வலியுறுத்தி வந்ததோடு கிலானியின் பதவியையும் முடிவுக்குக் கொண்டு வந்தது.

இந்த நிலயில் புதிய பிரதமருக்கும் உச்சநீதிமன்றம் கடும் நெருக்கடி கொடுத்தது.

இதனால்பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி மீது கொடுக்கப்பட்ட லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளின் விசாரணையிலிருந்து அவரைக் காப்பாற்றுவதற்காகவும் பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரப்பைத் தகுதி நீக்கம் செய்யப்படாமல் தடுக்கவும் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் உச்சநீதிமன்றத்தின் அதிகாரத்தைக் குறைக்கும் விதமாக ஒரு அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இந்தாண்டு கொண்டு வரப்பட்ட புதிய நீதிமன்ற புறக்கணிப்பு அவசர சட்டத்தை உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச்சின் நீதிபதி இப்திகார் சவுத்ரி நேற்று நிராகரித்துவிட்டார். பழைய நீதிமன்றச் சட்டமே நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்