கோபன்ஹேகன் மாநாட்டுத் தலைவர் பதவி விலகல்

புதன், 16 டிசம்பர் 2009 (17:41 IST)
டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் நடந்து வரும் வானிலை உச்சி மாநாடுக்கு தலைமை தாங்கிய டென்மார்க் அதிபர் கோன்னி ஹீடிகார்டு பதவி விலகினார்.

மொத்தம் 193 நாடுகள் பங்கேற்றுள்ள கோபன்ஹேகன் மாநாட்டில் வெப்பவாயு வெளியேற்றம் தொடர்பாக முடிவு எடுக்கும் பணி தீவிரமடைந்துள்ள நிலையில், மாநாட்டுத் தலைவர் பதவியில் இருந்து டென்மார்க் அதிபர் கோன்னி ஹீடிகார்டு விலகியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா வானிலை மாற்றத் தலைவர் போயர் பேசுகையில், “மாநாட்டுத் தலைவர் பதவியில் இருந்து ஹீடிகார்டு விலகினாலும், பேச்சுவார்தைகளில் அவர் தொடர்ந்து பங்கேற்பார். அவருக்கு பதிலாக டென்மார்க் பிரதமர் லார்ஸ் லியோக்கி மாநாட்டுத் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொள்வார” என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்