காணாமல் போன விமானத்தின் பைலட் பெண்களை கேபினுக்குள் அழைத்த முறைகேடு!

செவ்வாய், 11 மார்ச் 2014 (17:17 IST)
மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச்.370 காணாமல் போய் 4வது நாள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் காணாமல் போன மலேசிய விமானத்தின் சக பைலட் இதற்கு முன்பு ஓட்டும் அறைக்குள் இரு பெண் பயணிகளை அழைத்துச் சென்றதாகவும் விமனிகள் இருவருமே கேபினுக்குள் புகைப்பிடிப்பார்கள் என்றும் இது முறைகேடானது என்றும் திடுக்கிடும் தகவலை ஆஸ்ட்ரேலிய இணையதளம் வெளியிட்டுள்ளது.
FILE

தனது முந்தைய பயணத்தின் போது பைலட் கேபினுக்குள் மெல்பர்னைச் சேர்ந்த மிஸ்.ஜாண்டி ரூஸ், மற்றும் மிஸ் ஜான் மாரீ என்ற பயணிகளை அழைத்து புகேயிலிருந்து கோலாலம்பூர் வரை அவர்களை கேபினுள்ளேயே இருக்க அனுமதித்துள்ளாராம்.

அந்த பைலட்டுடன் போட்டோக்களும் தாங்கள் எடுத்துக் கொண்டதாக அந்த இரு பயணிகளும் தற்போது கரன்ட் அஃபேர் என்ற ஊடகத்திற்குத் தெரிவித்துள்ளனர்.

மேலும் விமானிகள் இருவரும் இவர்கள் இருந்த நேரம் முழுதும் கேபினுள்ளேயே சிகரட் பிடித்தனர் என்றும் இது விதிமுறைகளுக்குப் புறம்பானது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
FILE

ஒரு சில நேர்த்தில் இரு விமானிகளும் தங்கள் பக்கம் திரும்பி பேசிக்கொண்டே வந்தனர் என்று திடுக்கிடும் தகவலையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

மேலும் இவர்களது நண்பர்களையும் உள்ளே அழைத்து கைரேகை நிபுணர் போல் உங்கள் கை ஈரப்ப்சையுடம் இருக்கிறது நீங்கள் படைப்பாற்றல் மிக்கவர் என்று வேறு கூறினாராம் அந்த பலே பைலட்.

இதோடு மட்டுமல்லாது ருஸ் மற்றும் மாரீ இருவரும் கோலாலம்பூரில் தங்கவேண்டும் என்றும் இரவில் விருந்தில் கலந்துகொள்ளவேண்டும் என்றும் அன்புக் கோரிக்கை வைத்தாராம்.

டிசம்பர் 2011-இல் இவர்கள் கியூவில் நின்று கொண்டிருந்ததைப் பார்த்த மலேசிய ஏர்லைன்ஸ் விமானி ஹமீத் இவர்கள் விமானத்திற்குள் ஏறி அமர்ந்ததும் விமான பணியாளை அனுப்பி விமானம் ஓட்டும் அறையான கேபினுக்குள் வருமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.

நாங்கள் பாதுகாப்பாகவே இருந்தோம் அவர்கள் இருவௌம் அவ்வளவு திறமையான பைலட்களே. ஆனாலும் அவர்கள் அங்கேயே புகை பிடித்தது மட்டும் எங்களுக்கு சரியாகப் படவில்லை.

இவ்வாறு கூறியுள்ளனர் தற்போது காணாமல் போன விமானத்தின் பைலட்டுடன் கேபினில் பயணம் செய்த அந்த இரு இளம் பெண்களும்.

வெப்துனியாவைப் படிக்கவும்