கராச்சியை தாலிபான்கள் கைப்பற்றலாம்: காவல்துறை அறிக்கை

ஞாயிறு, 1 மார்ச் 2009 (17:01 IST)
பாகிஸ்தானில் தாலிபான் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் மேலோங்கி வரும் நிலையில், கராச்சி நகரை எந்நேரமும் அவர்கள் கைப்பற்றக் கூடும் என கராச்சி நகர சி.ஐ.டி. சிறப்புப் பிரிவு காவல்துறையினர் தயாரித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிந்து மாகாண காவல்துறைத் தலைவர், அம்மாகாண அரசுக்கு சமர்ப்பித்துள்ள அந்த அறிக்கையில், இஸ்லாமாத், ராவல்பிண்டி ஆகிய நகரங்களில் ஏற்கனவே தாக்குதல் நடத்தியுள்ள தாலிபான்கள், கராச்சியில் ஏராளமான பதுங்கு இடங்களை உருவாக்கி வைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் அவர்கள் வசம் ஏராளமான ஆயுதங்களும் தற்போது உள்ளதால் எந்த நேரமும் கராச்சி நகருக்கு நுழைந்து புரட்சி ஏற்படுத்தி நகரத்தைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்