ஐரோப்பிய நாடுகளில் கடும் பனிப்பொழிவு: 66 பேர் பலி

புதன், 1 பிப்ரவரி 2012 (13:57 IST)
கிழக்கு, மத்திய ஐரோப்பிய நாடுகளில் நிலவும் கடுமையான பனிப்பொழி மற்றும் குளிர் காரணமாக இதுவரை பெண்கள், முதியோர் உட்பட 66 பேர் பலியாகி உள்ளனர்.

உக்ரைன் நாட்டில் தான் பனியின் பாதிப்பு அதிகம் உள்ளது.கடந்த 5 நாட்களில் மட்டும் 30 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடும் பனிப்பொழிவையொட்டி,தெருக்களில் வசிக்கும் மக்களுக்காக 1500 முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன.

600 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

போலந்து நாட்டில் குளிருக்கு 21 பேர் பலியாகி உள்ளனர்.ருமேனியாவில் 8 பேரும்,பல்கேரியாவில் 5 பேரும்,செர்பியாவில் 2 பேரும் குளிருக்கு உயிரிழந்துள்ளனர்.

சாலைகள், தண்டவாளங்களில் பனி படர்ந்து கிடப்பதால் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சமையல் எரிவாயு, உணவுப் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.மின்சார சேவை பாதிப்படைந்துள்ளது.மக்கள் வீட்டுக்குளேயே முடங்கி கிடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.பனியில் சிக்கிய வாகனங்களை இராணுவ வீரர்கள் மீட்டு வருகின்றனர்.கடும் பனி மூட்டம் காரணமாக விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்