ஏமன் விமான விபத்து ; கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு

வெள்ளி, 28 ஆகஸ்ட் 2009 (17:46 IST)
இந்தியப் பெருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளான ஏமன் விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 30 ஆம் தேதியன்று பயணிகள் மற்றும் விமான சிப்பந்திகள் 153 பேருடன், பாரிஸில் இருந்து புறப்பட்ட ஏமனியா நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம், ஏமன் நாட்டில் தரையிறங்கி, பின்னர் மீண்டும் மரோனிக்கு புறப்பட்டுச் சென்றது.

இந்தியப் பெருங்கடலின் மீது அந்த விமானம் பறந்து சென்றபோது, நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது.இதில் 14 வயது சிறுமி மட்டும் மீட்புக்குழுவினரால் உயிருடன் மீட்கப்பட்டாள்.

விமானம் விழுந்ததாக கருதப்படும் கடல் பகுதியில் விபத்துக்குள்ளான விமான பாகங்களையும்,கருப்பு பெட்டிகளையும் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்நிலையில், விபத்துக்குள்ளான ஏமன் விமானத்தின் கருப்பு பெட்டி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த கருப்பு பெட்டி, விமானம் பறக்கும்போது நடந்த நிகழ்வுகளை பதிவு செய்த பெட்டியாகும்.

அதே சமயம் உரையாடல்கள் மற்றும் ஒலிப்பதிவுகள் அடங்கிய ' வாய்ஸ் ரெக்கார்டர் ' எனப்படும் மற்றொரு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டதா என்பது குறித்த தகவல் இல்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்