எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தும் சோயா பீன்ஸ்

புதன், 31 ஜூலை 2013 (15:08 IST)
FILE
எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தும் தன்மை சோயா பீன்ஸில் உள்ள ஒரு ேர்மத்திடம் உள்ளதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

‘எய்ட்ஸ்’ நோயை கட்டுப் படுத்த பலவிதமான மருந்துகளும், மருத்துவ முறைகளும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சோயா பீன்சும் எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தும் தன்மை உடையது என நிபுணர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

ஜார்ஜ் மேசன் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் சோயா பீன்ஸ் உள்ளிட்ட தாவரங்களில் ஆராய்ச்சி செய்தனர்.

அதில் சோயாபீன்சில் எய்ட்ஸ் நோயை உண்டாக்கும் ‘எச்.ஐ.வி.’ கிருமிகளை தடுக்கும் ஜெனிஸ்டின் என்ற மூலப் பொருள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஜெனிஸ்டின் செல்களில் எச்.ஐ.வி. கிருமிகள் ஊடுருவி பரவாமல் தடுக்கும் சக்தி வாய்ந்தது எனவும் இதன் மூலம் எய்ட்ஸ் நோயை சோயா பீன்ஸ் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டதாக உள்ளதாகவும் பேராசிரியர் யுன்தாவு வூ தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்