எகிப்து புதிய பிரதமர் அறிவிப்பு

வியாழன், 3 மார்ச் 2011 (19:30 IST)
எகிப்து நாட்டின் புதிய பிரதமரை அந்நாட்டு இராணுவ ஆட்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

எகிப்தில் அதிபராக இருந்த ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டம் காரணமாக அவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு ஓடிவிட்டார்.

இதனைத் தொடர்ந்து நாட்டின் நிர்வாகத்தை இராணுவம் தற்காலிகமாக கையிலெடுத்துக் கொண்டது.

இந்நிலையில் முபாரக் ஆட்சி காலத்தில் பிரதமரான அகமத் ஷாகிப்பையும் அப்பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

இக்கோரிக்கை நாளுக்கு நாள் வலுப்பெற்றதை தொடர்ந்து அகமது பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக புதிய பிரதமராக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சரான எஸ்ஸாம் ஷரப்பை அப்பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இராணுவம் இன்று வெளியிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்