ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்: இலங்கைக்கு ஐ.நா. கண்டிப்பு

செவ்வாய், 1 பிப்ரவரி 2011 (18:51 IST)
இலங்கையில் ஊடகவியலாளர்கள் அச்சமின்றி செயற்படும் நிலை உருவாகப்பட வேண்டும் என்று அந்நாட்டு அரசை ஐ.நா.வலியுறுத்தியுள்ளது.

'லங்கா ஈ நியூஸ்' இணையத்தளம் அலுவலகம் மீதான தாக்குதல் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே ஐ.நா. சபை செயலாளர் பான் கி மூனின் பேச்சாளர் மேற்கண்டவாறு கூறினார்.

இலங்கையில் ஊடகவியலாளர்கள் எதுவித அச்சமுமின்றி செயற்படும் நிலை உருவாக்கப்பட வேண்டும்.அடக்குமுறைக்கு உட்படுத்தப்படுவோம் அல்லது தாக்கப்படுவோம் என்பது போன்ற அச்சங்கள் ஊடகவியலாளர்களுக்கு ஏற்படாத வகையில் பாதுகாக்கப்பட வேண்டும்.

ஊடகவியலாளர்கள் அச்சமின்றி தமது கருத்துக்களை வெளியிடக் கூடிய சூழல் மிகவும் அவசியமானது என்று அவர் மேலும் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்