உலக பணக்கார்கள் பட்டியலில் இந்தியர்களில் முகேஷ் அம்பானி முதலிடம்
வெள்ளி, 9 மார்ச் 2012 (04:57 IST)
உலக பணக்கார்கள் பட்டியலில் இந்தியர்களில் முகேஷ் அம்பானி முதலிடத்தை பிடித்துள்ளார் என போர்பஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் இருந்து வெளியாகும் போர்பஸ் பத்திரிக்கை ஆண்டு தோறும் உலகளவில் உள்ள பணக்கார நபர்களின் பெயர்களை பட்டியலிட்டு வருகின்றது.
இந்த பட்டியலில் மொத்தம் இந்தியர்கள் 48 பேர் உள்ளனர்.
இதில் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார். இவரின் சொத்து மதிப்பு 22.3 பில்லியன் டாலர் என தெரிவித்துள்ளது.
இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் லட்சுமி மிட்டல். இவரின் சொத்து மதிப்பு 20.7 பில்லியன் டாலர்கள்.
மூன்றாவது இடத்தில விப்ரோ அதிபர் அசிம் பிரேம்ஜி. இவரின் சொத்து மதிப்பு 15.9 பில்லியன் டாலர்கள்.
இவர்களைத் தவிர குமார் பிர்லா, அனில் அம்பானி, திலிப் சங்க்வி, சசி,சாவித்ரி ஜின்டால் மற்றும் குடும்பத்தினர், சுனில் மிட்டல் மற்றும் குடும்பத்தினர், ரவி ரூயா, குஷால் பால் சிங் ஆகியோரும் இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
English Summary : Mukesh Ambani is the first richest person in India, says Forbes Magazine.