ஈரான் எதிர்கட்சி பிரமுகர்கள் பிணையில் விடுவிப்பு

வியாழன், 1 அக்டோபர் 2009 (19:01 IST)
ஈரானில் தேர்தலுக்கு பிந்தைய கலவரத்தை தூண்டிய குற்றச்சாற்றில் கைது செய்யப்பட்டு கடந்த மூன்று மாத காலமாக சிறையிலடைக்கப்பட்டிருந்த முக்கிய எதிர்கட்சித் தலைவர் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஈரான் அதிபர் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக கூறி, தேர்தல் முடிவடைந்த பின்னர், அதிபர் அகமதுனிஜாத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

இதனைத் தொடர்ந்து கலரவத்தை தூண்டிய குற்றச்சாற்றின் பேரில் எதிர்கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் சிறையிலடைக்கப்பட்டு மூன்று மாதங்களாகிவிட்ட நிலையில்,சயீத் ஹஜ்ஜாரியன் என்ற முக்கிய தலைவரை ஈரான் அரசு தற்போது பிணையில் விடுதலை செய்துள்ளது.

ஈரானில் சமூக மற்றும் அரசியல் சுதந்திரத்திற்கு அழுத்தமாக குரல் கொடுத்து வரும் சயீத்துதான், மேற்கூறிய போராட்டத்தை முன்னெடுத்து சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்