ஈரான் எதற்கும் அஞ்சாது: அகமது நிஜாத்

திங்கள், 12 மார்ச் 2012 (19:13 IST)
''மேற்கத்திய நாடுகளின் எந்தவொரு ராணுவ நடவடிக்கைக்கும் ஈரான் அஞ்சாது'' என்று அ‌ந்நா‌ட்டு அதிபர் அகமது நிஜாத் தெரிவித்துள்ளார்.

மேற்கு தெஹ்ரானில் உள்ள கரஜ் நகருக்குச் சென்ற அகமது நிஜாத் பேசுகையில், மேற்கத்திய நாடுகளின் வெடிகுண்டுகள், போர்க்கப்பல்கள் மற்றும் போர்விமானங்களுக்கு ஈரான் ஒருபோதும் அஞ்சாது என்றா‌ர்.

"அகந்தை மற்றும் காலனியாதிக்கம் எல்லாம் கடந்துவிட்டன. காரணமில்லாத சகாப்தங்கள் கூட கடந்துவிட்டன. எங்களிடன் அனைத்தும் உள்ளன என்று நீங்களே சொல்கிறீர்கள். எனவே எங்களை விட்டுவிடுங்கள்" என்று அகமதிநிஜாத் மேற்கத்திய நாடுகளுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரான் சட்டவிரோத அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. எதற்கும் அஞ்சாத ஈரான் தனது பணியை செவ்வனே செய்து வருகிறது. இதனால் போர் மூளும் சூழல் உருவாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்