இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா.வில் விவாதம்

வெள்ளி, 2 செப்டம்பர் 2011 (14:45 IST)
ஐ.நா.மனித உரிமைகள் பேரவை அமர்வில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து விவாதம் நடைபெற உள்ளது.

ஐ.நா. சபையின் மனித உரிமைகள் மீதான சபை அமர்வின்போது இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து முதற்கட்டமான விவாதம் இடம்பெறவேண்டுமென அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் நேற்றைய தினம் இராஜதந்திர ரீதியிலான வலியுறுத்தல்களை மீண்டும் விடுத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, ஐ.நா. மனித உரிமைகள் மீதான சபைக் கூட்டத்தில் விசேட அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதற்கு, இலங்கை அயலுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசிங்க ஆகியோர் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

அதேசமயம், தாருஸ்மன் தலைமையிலான ஐ.நா. நிபுணர் குழுவின் விசாரணை அறிக்கையையும், மனித உரிமைகள் பேரவை அமர்வின் போது இலங்கையின் மனித உரிமை மீறல்கள் மீதான விவாதத்தில் அத்தாட்சியாக எடுத்துக்கொள்ளவேண்டுமென்று மேற்படி நாடுகள் அழுத்தத்தை வழங்கியிருப்பதாகத் தெரியவருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்