இறைச்சி இறக்குமதி தடையை நீக்கியது சீனா

செவ்வாய், 1 டிசம்பர் 2009 (13:33 IST)
அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளிளிருந்து இறைச்சி இறக்குமதி செய்ய விதித்திருந்த தடையை சீனா நீக்கியுள்ளது.

பன்றிக் காய்ச்சல் நோய் பரவல் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஆண்டு தொடக்கத்தில் மேற்கூறிய மூன்று நாடுகளிலிருந்தும் இறைச்சி இறக்குமதி செய்ய சீனா தடை விதித்திருந்தது.

இந்நிலையில்,இறைச்சி இறக்குமதி மூலம் தற்போது பன்றிக் காய்ச்சல் பரவுவதற்கான வாய்ப்பு குறைந்துள்ளதாக தெரிய வந்தததையடுத்து மேற்கூறிய 3 நாடுகளிலிருந்தும் இறைச்சி இறக்குமதி செய்வதற்கான தடை நீக்கப்பட்டுள்ளதாக சீன இறைச்சி தர மேற்பார்வை மற்றும் ஆய்வு நிர்வாக இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்