இருட்டறையில் சிறுமியை பலாத்காரம் செய்தது யார்: 500 பேருக்கு டி.என்.ஏ. சோதனை

Suresh

செவ்வாய், 22 ஏப்ரல் 2014 (18:22 IST)
பிரான்ஸ் நாட்டில் 16 வயது பள்ளிச் சிறுமி இருட்டில் பலாத்காரம் செய்யப்பட்டதால் குற்றவாளியை கண்டுபிடிக்க மாணவர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டவர்களுக்கு மரபணு சோதனை நடத்தப்படுகிறது.
 
பிரான்சின் லா ரோசில்லி நகரிலுள்ள பிரபல தனியார் பள்ளியில் படித்து வந்த 16வயது மாணவி, பள்ளிக் கழிவறையில் இரவு நேரத்தில் பலாத்காரம் செய்யப்பட்டார்.
 
கழிவறையில் மின்விளக்குகள் அணைக்கப்பட்டிருந்ததால் பலாத்காரம் செய்தவரை அந்த மாணவியால் அடையாளம் காணமுடியவில்லை. இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் மாணவி மற்றும் அவரது பெற்றோர் புகார் கொடுத்தனர்.
 
இதுகுறித்து காவல்துறையினருக்கு பள்ளி நிர்வாகம் தகவல் கொடுத்தது. காவல்துறையினர்  நடத்திய விசாரணையில் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், குற்றவாளியை கண்டுபிடிப்பதற்காக பள்ளியில் படிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள் பணியாளர்கள் உள்ளிட்ட ஆண்கள் அனைவருக்கும் மரபணு சோதனை நடத்த காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
 
குற்றவாளியைக் கண்டுபிடிக்க நடத்தப்படும் இந்த சோதனைக்கு, பெற்றோர்கள் ஒத்துழைக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்ளப் பட்டனர்.
 
அதன்படி, 475 மாணவர்கள், 31 ஆசிரியர்கள், 21 பணியாளர்கள் என 500க்கும் மேற்பட்டோருக்கு மரபணு சோதனை நடத்தப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்