இந்தியா - பாக். பிரச்னையை தீர்க்க யு.எஸ்., பிரிட்டன் பங்களிப்பு தேவை: கிலானி

புதன், 16 டிசம்பர் 2009 (18:27 IST)
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பிரச்னைகளை தீர்க்க அமெரிக்காவும், பிரிட்டனும் ஆக்கப்பூர்வ பங்காற்ற வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் யூசுப் அலி கிலானி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கான பிரிட்டன் தூதரக அதிகாரியாக பணியாற்றிய ராபர்ட் பிரிங்க்லி, அப்பணியிலிருந்து விடுபட்டு நாடு திரும்புவதையொட்டி அவரை கிலானி சந்தித்துப் பேசினார்.

அப்போது மேற்கண்ட கோரிக்கையை விடுத்த அவர், இந்தியா - பாகிஸ்தான் இடையே காணப்படும் பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்பட்டால்தான், ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டிய மேற்குப் பகுதியில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில், தமது நாடு கவனம் செலுத்த முடியும் என்று கிலானி மேலும் கூறியதாக பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்