இந்தியா, சீனாவுடன் நெருக்கமான உறவு உள்ளது: அமெரிக்கா

வெள்ளி, 2 ஜூலை 2010 (13:59 IST)
இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுடன் தாங்கள் நெருக்கமான உறவை கொண்டிருப்பதாகவும், இதில் எந்த ஒரு நாடும் தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கருதவேண்டாம் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.

வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த அமெரிக்க பாதுகாப்பு கொள்கைக்கான செயலர் மைக்கேல் ஃபுளோர்னாய், மூன்று நாடுகளுமே பிராந்திய நிலைத்தன்மைக்கு முக்கிய பங்காற்றுவதாக கூறினார்.

பத்திரமான, மிகுந்த பாதுகாப்பான இந்தியா, அமெரிக்காவுடன் நெருக்கமான உறவு வைத்திருப்பதால், சீனாவுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று கருத தேவையில்லை.

பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் சமீப ஆண்டுகளாக இந்தியா - சீனா இடையே அதிகரித்துவரும் ஒத்துழைப்பை அமெரிக்கா அங்கீகரித்து, வரவேற்றுள்ளது என்று மைக்கேல் மேலும் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்