இந்தியர்களா வேலைக்கு வேண்டவே வேண்டாம் விளம்பரத்தால் ஆஸ்ட்ரேலியாவில் சர்ச்சை!

செவ்வாய், 28 ஆகஸ்ட் 2012 (15:13 IST)
ஆஸ்ட்ரேலியாவில் பல்வேறு நகரங்களில் சூப்பர் மார்க்கெட் செயின் ஸ்டோர்களை நடத்தி வரும் கோல்ஸ் நிறுவனத்தின் ஒப்பந்ததாரர் ஒருவர் தனது ஸ்டோருக்கு வேலைக்கு ஆட்கள் தேவை ஆனால் இந்தியர்களோ, ஆசியர்களோ தயவு செய்து விண்ணப்பம் செய்யவேண்டாம் என்று விளம்பரம் கொடுத்தது பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஹோபார்ட்டில் உள்ள ஈஸ்ட்லேண்ட் ஷாப்பிங் சென்டரில் உள்ள சூப்பர் மார்கெட்டிற்கு சுத்தீகரிப்பு பணியாளர்கள் தேவை என்ற இந்த விளம்பரம் கும்டீ இணையதளத்தில் வெளியானது.

இது சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சைகளை எழுப்பி, அந்த சூப்பர் மார்க்கெட்டை புறக்கணிக்க கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

ஆனால் இந்த விளம்பரம் பின்பு நீக்கப்பட்டது என்று உள்நாட்டு பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

மேலும் மூல நிறுவனன்மான கோல்ஸிற்கு தெரியப்படுத்தாமல் இந்த விளம்பரம் செய்யப்பட்டுள்ளது இது சட்ட விரோதமானது என்று கோல்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆஸ்ட்ரேலிய சட்ட விதிகளின் படி நிறம், இன அடிப்படையிலான பாகுபாடு சட்ட விரோதமானது. தண்டனைக்குரியதாகும். எனவே நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் என்று டாஸ்மேனியா பாகுபாடு எதிர்ப்புத் துறை அமைச்சர் ராபின் பேங்க்ஸ் உறுதி அளித்துள்ளார்.

மேலும் இது மட்டுமல்லாது பல வேலை வாய்ப்பு விளம்பரங்களில் இதுபோன்ற நிற/இன பாகுபாடு வெளிப்படுத்தப்படுவதாக தனக்கு புகார்கள் வருவதாக அவர் தெரிவித்தார்.

இந்த விளம்பரத்தைக் கொடுத்த நவர்/நிறுவனம் மற்றும் அதனை வெளியிட்டுள்ள ஊடகம் இரண்டுமே சட்டத்தின் நடவடிக்கைகளை சந்தித்தாகவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்