ஆஸ்ட்ரேலியா: அகதிகள் விண்ணப்பங்கள் அதிக அளவில் நிராகரிப்பு

வெள்ளி, 1 அக்டோபர் 2010 (19:18 IST)
ஆஸ்ட்ரேலியாவில் அகதியுரிமை கோரியிருக்கும் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகளில் அதிகளவிலானோரின் விண்ணப்பங்களை நிராகரிப்பதென அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாகத் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நாடுகளைச் சேர்ந்த சிறுபான்மையினக் குழுக்கள் துன்புறுத்தலுக்குள்ளாகும் அபாயம் குறைவாக இருப்பதாக ஆஸ்ட்ரேலிய அரசாங்கம் நம்புவதாக "த ஆஸ்ட்ரேலியன்" என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது

இதேவேளை, புகலிடம் கோருவோர் எனச் சந்தேகிக்கப்படும் 18 பேருடன் படகொன்று புதன்கிழமை இரவு அஸ்மோர் தீவுகளுக்கு வடபகுதியில் வைத்து ஆஸ்ட்ரேலிய கடற்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இது இந்த வருடம் ஆஸ்ட்ரேலியாவுக்கு வந்தடைந்துள்ள 97 ஆவது படகாகும். இதுவரை படகுகள் மூலம் 4,612 பேர் அஆஸ்ட்ரேலியாவுக்கு வருகை தந்துள்ளனர்.

இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரையில் துன்புறுத்தலுக்கு இலக்காகுவது இப்போது குறைந்தளவிலேயே காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அகதிகளின் விண்ணப்பங்களை பரிசீலிப்பதை நிறுத்தி வைத்திருந்த ஆஸ்ட்ரேலியா, இப்போது அவற்றை பரிசீலிப்பதற்கான நடவடிக்கையை மீண்டும் தொடங்கியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்