ஆப்கான் : தற்கொலை தாக்குதலில் 12 பேர் பலி

செவ்வாய், 18 ஆகஸ்ட் 2009 (17:42 IST)
ஆப்கானிஸ்தானில் இன்று நிகழ்ந்த தற்கொலை தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானில் நாளை மறுதினம் அதிபர் தேர்தல் நடைபெற்ற உள்ள நிலையில், அதனை சீர்குலைக்க தாலிபான் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக இன்று அதிகாலை அதிபர் ஹமீத் கர்சாய் வீட்டின் மீதும், காவல் துறை தலைமையகம் மீதும் தீவிரவாதிகள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர்.இதில் 10 பேர் காயமடைந்தனர்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மார்க்கெட் ஒன்றின் அருகே நிகழ்ந்த தற்கொலை தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர் ; 50 க்கும் அதிகமானோர் காயமடைந்ததாக காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நோட்டோ படையினரை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டாலும், இதில் கொல்லப்பட்டவர்கள் பெரும்பாலானோர் பொதுமக்களே என்றும் அந்த அதிகாரி மேலும் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்