அமெரிக்கா மீது இலங்கை புகார்: LTTEக்கு ஆயுத உதவி

புதன், 27 மார்ச் 2013 (17:18 IST)
இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தினால், பெரும அதிர்ப்தியில் உள்ள இலங்கை அரசு, இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்கா மீது கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு 11 நாடுகள் ஆயுதங்கள் வழங்கியுள்ளன. இது தொடர்பான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. முள்ளிவாய்க்காலில் மீட்கப்பட்ட ரகசிய ஆவணங்களில் இந்த ஆயுத கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான ஆதாரங்கள் காணப்படுகின்றன.

அமெரிக்க படையினர் பயன்படுத்தும் எம்.16 ஆயுதங்களையும், சமிக்ஞை கருவிகளையும் விடுதலைப்புலிகள் பயன்படுத்தியுள்ளனர். அவர்களின் கப்பல்கள் சர்வதேச கப்பல் நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தன. ராணுவத்தினருக்கு கிடைக்காத சில எந்திர சாதனங்களை விடு தலைப்புலிகள் பயன்படுத்தினர்.

எனவே, இந்த ஆதாரங்களை சர்வதேச சமூகத்திற்கு சமர்ப்பிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் விடுதலைப் புலிகளுக்காக ஆயுதம் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்ட குமரன் பத்மநாதனை சாட்சியாக ஆஜர் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் இலங்கை அரசு அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்