ஜெர்மனியில் பழமையான வெடிகுண்டு வெடித்தது

வெள்ளி, 31 ஜனவரி 2014 (17:55 IST)
ஜெர்மனியில் இரண்டாவது உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட 250 கிலோ எடை கொண்ட வெடிகுண்டை செயலிழக்க செய்யும் நிபுணர்கள் வெற்றிகரமாக வெடிக்க செய்தனர். இதற்காக 300 மீட்டர் தொலைவில் இருந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
FILE

ஜெர்மனியின் கொலோக்னி என்ற இடத்தில் கட்டிடம் கட்டுவதற்கான பணி நடைபெற்றது. அப்போது இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. குடியிருப்புகள் நிறைந்த அப்பகுதியில் வெடிகுண்டை கண்டதும் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

பின்னர் இது தொடர்பாக வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் பத்திரமாக வெடிகுண்டை வெடிக்க செய்தனர்.

இதேபோன்று அதே பகுதியில் இரண்டாவது உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டை நிபுணர்கள் செயலிழக்க செய்தனர். அங்கிருந்த மக்கள் 1800 பேர் வெளியேற்றப்பட்டு இந்த பணி நடைபெற்றது என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், ஜெர்மனியில் வெடிகுண்டுகள் பூமிக்கடியில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஜெர்மனியின் எஸ்கிர்சென் என்ற இடத்தில் ஜனவரி 3ம் தேதி வீடு கட்டும் பணி நடந்த போது வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்