காதல் திருமணம்: ரூ.17 லட்சம் அபராதம்; பாகிஸ்தான் அதிரடி!!

வெள்ளி, 10 மார்ச் 2017 (11:06 IST)
காதல் திருமணம் செய்த இளைஞருக்கு பாகிஸ்தான் பழங்குடியினர் நீதிமன்றம் ரூ.17 லட்சம் அபராதம் விதித்துள்ளது. 


 
 
சிந்து மாகாணத்தின் கந்த்கோட்- காஷ்மோர் மாவட்டம் தங்வானி அருகேயுள்ளது பஜர் அபாத் என்ற கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் ஒருவர் தான் காதலித்தவரை சட்டப்படி திருமணம் செய்தார்.
 
இந்தத் திருமணத்தை விரும்பாத அந்தப் பெண்ணின் பெற்றோர் பழங்குடியின நீதிமன்றம் என்று கூறப்படும் ஜிர்காவில் வழக்கு தொடர்ந்தனர். 
 
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பெண்ணின் கணவன் ரூ.17 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தனர். 
 
இந்தத் தொகை, திருமணம் செய்த பெண்ணின் பெற்றோருக்கு ஏற்பட்ட அவமானத்திற்கு நஷ்ட ஈடாக செலுத்த வேண்டும் என நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்