உக்ரெயினில் இருந்து சுதந்திரம் பெற்றுவிட்டதாக கிரிமியா அறிவிப்பு

செவ்வாய், 18 மார்ச் 2014 (10:26 IST)
உக்ரெயினில் இருந்து சுதந்திரம் பெற்றுவிட்டதாக கிரிமியா நாடாளுமன்றம் அறிவித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த வாக்கெடுப்பின் முடிவை கொண்டு இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
FILE

மேலும் ரஷ்யாவில் இணைவதற்கும் விண்ணப்பித்துள்ளது. இந்நிலையில் உக்ரெயின் அதிகாரிகள் இந்த வாக்கெடுப்பை சட்டப்பூர்வமாக மறுத்து வருகின்றனர். கிரிமியா உக்ரெயின் நாட்டின் மாநில எல்லைப்பகுதி நமது குடிமக்கள் அங்கு வசிக்கிறார்கள் இந்த வாக்கெடுப்பை அங்கீகரிக்க முடியாது என உக்ரெயின் நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஆனால் கிரிமியா வளைகுடாவில் இருக்கும் அனைத்து உக்ரெய்னியர்களின் சொத்துக்களும் தேசியமயமாக்கப்படுவதாகவும், இனி இந்த பிராந்தியத்தில் உக்ரெய்னியச் சட்டங்கள் செல்லுபடியாகாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்